
சில பேடண்ட் (Patent) விதிமுறைகளை மீறியதாக கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS Word மென்பொருளை விற்க அந்நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கு 240 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்துள்ளதால் , மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இந்த மென்பொருளை விற்க 60 நாட்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த MS Word மென்பொருள் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்துள்ள நிலையில் இந்த அபராதம் அதிகமானதாக கருதப்படுகிறது.
இந்த உத்தரவு MSWord ன் 2003 மற்றும் 2007 பதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
TamilWin.com